SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரீபியன் பிரிமியர் லீக் கிறிஸ் கேல் அதிரடி வீண்

2018-08-11@ 01:14:38

கயானா: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 6 விக்கெட்  வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற அமேசான் வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. செயின்ட் கிட்ஸ்  அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது.  தொடக்க வீரரும் கேப்டனுமான கிறிஸ் கேல் அதிகபட்சமாக 86 ரன் (65 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். கூப்பர், கட்டிங் தலா 15 ரன்  எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் 16.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வென்றது. வால்ட்டன் 9, லூக் ரோங்கி 0,  கேப்டன் சோயிப் மாலிக் 14, ஜேசன் முகமது 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கிரீன் 25* ரன், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 79  ரன் (45 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அமேசான் அணி 2 புள்ளிகள் பெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்