SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: கால் இறுதியில் நடால்

2018-08-11@ 01:12:30

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல்  நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதிய நடால் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி  முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் வாவ்ரிங்கா கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. 2  மணி, 8 நிமிடத்துக்கு நடந்த இப்போட்டியில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வாவ்ரிங்கா, தற்போது உலக தரவரிசையில் 195வது இடத்துக்கு பின்தங்கியிருந்தாலும் நம்பர் 1  வீரருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் அதிர்ச்சி: செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தனது 3வது சுற்றில் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸுடன் (19 வயது, கிரீஸ்)  மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சிட்சிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். முன்னணி  வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிக்கா),  அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ரோஜர்ஸ் கோப்பை தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 6-2, 6-2 என்ற நேர்  செட்களில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) மிக எளிதாக வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றில் ரஷ்யாவின்  மரியா ஷரபோவாவுடன் மோதிய கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முன்னணி வீராங்கனைகள் கிகி பெர்டன்ஸ், அனஸ்டேசியா சேவாஸ்டோவா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ், எலினா ஸ்விடோலினா, எலிஸ்  மெர்டன்ஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்