SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தொடரை வென்றது இந்தியா யு-19

2018-08-11@ 01:11:39

மொராத்துவா: இலங்கை யு-19 அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக  வென்ற இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பெர்னாண்டோ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில்  வென்று பேட் செய்த இலங்கை யு-19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. நிஷான் 95, நுவானிடு 56, சூரியபண்டாரா 20,  பரணவிதனா 17 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்து வென்றது.  படிக்கல் 38, பவன் ஷா 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 114 ரன் (128 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஜுயல் 22 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.  ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது, இலங்கையின் நிஷான் தொடர் நாயகன் விருது பெற்றனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்