SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கிறார் சோப்ரா: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2018-08-11@ 01:10:46

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்  சோப்ரா தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில், 18வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை  நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 572 பேட் அடங்கிய பிரமாண்ட அணி பங்கேற்கிறது. இந்திய குழுவினரை  வழியனுப்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (20 வயது)  தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா அறிவித்தார். இது குறித்து சோப்ரா கூறுகையில்,  ‘இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.முதல் முறையாக அணிவகுப்புக்கு தலைமை வகிக்க  இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும், ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’  என்றார்.

2014ம் ஆண்டு தென் கொரியாவின் இஞ்ச்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு ஹாக்கி  வீரர் சர்தார் சிங் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் இந்திய அணி 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலப்  பதக்கங்களை வென்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்