SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபக்சே கூட்டணிக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது: சபாநாயகர் அறிவிப்பு

2018-08-11@ 01:08:50

கொழும்பு:இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை சேர்ந்த 8 எம்பி.க்கள் தங்கள் கூட்டணியை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் மனு அளித்தனர். அதில், இந்த எதிர்க்கட்சிக்கு எம்.பி. தினேஷ் குணவர்தனாவை தலைவராக நியமிக்கவும் கோரினர். மேலும், தங்கள் கூட்டணியில் 70 எம்பி.க்கள் உள்ளதாகவும், தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டணியில் 16 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், இந்த மனுவை சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று நிராகரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 2015 நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ராஜபக்சே தலைமையிலான கட்சி வெற்றி ெபற்றது. அதனால், அரசியமைப்பு சட்டத்தின்படி, எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி, கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. அப்போது முதல் சிறிசேனாவின் கூட்டணியில் இருந்து பல எம்பி.க்கள், ராஜபக்சே கூட்டணியில் இணைந்து வருகின்றனர். சிறிசேனாவின் கூட்டணியில் இப்போது 26 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்