SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வாக்களித்தபோது தேர்தல் விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் மன்னிப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு

2018-08-11@ 01:08:01

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள இம்ரான் கான், வாக்களித்ததில் தேர்தல் விதியை மீறியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்  கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பின்னர், பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. புதிய பிரதமராக இம்ரான் கான் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், இம்ரான்கான் இஸ்லாமாபாத் என்ஏ-53 தொகுதியில் வாக்களித்த போது, தேர்தல் விதியை மீறியதாக தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. வாக்களிப்பதற்காக வைக்கப்பட்ட மறைவான இடத்திற்கு செல்லாமல் பொது வெளியிலேயே இம்ரான் கான் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. மேலும், தனது கட்சிக்கு இம்ரான் வாக்களிக்கும் காட்சியை அனைத்து மீடியாக்களும் பதிவு செய்தன.  இதுதொடர்பாக இம்ரான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘வாக்குச்சாவடியில் அதிக கூட்டம் காரணமாக, வாக்களிக்கும் இடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த திரைச்சீலை சரிந்து விழுந்தது. அந்த சமயத்தில் இம்ரான் கானின் அனுமதி இல்லாமல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன’ என கூறப்பட்டது.

இது குறித்து எழுத்துப்பூர்வமாக இம்ரான் கான் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இம்ரான் கான் நேற்று எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். இந்த வழக்கின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. யாருக்கு ஓட்டளித்தோம் என்ற ரகசியத்தை காக்கத் தவறினால் பாகிஸ்தான் சட்டப்படி 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்க முடியும்.

18ம் தேதி பதவியேற்பு?
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 19 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நாளை மறுதினம் கூடுகிறது. பாகிஸ்தான் அரசியலமைப்புபடி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 21 நாளில் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். அதன்படி, இக்கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். அடுத்த 2 நாட்களில் புதிய பிரதமரை அவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர். பாகிஸ்தானின் சுதந்திர தினமான வரும் 14ம் தேதி பிரதமராக பதவி ஏற்க இம்ரான் விரும்பினார். ஆனால், நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அவர் 18ம் தேதிக்கு பதவி ஏற்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் செனடர் பைசல் ஜாவேத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்திய தூதரக குழுவினர் நேற்று இம்ரான்கானை சந்தித்து பேசினர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்