SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்கு குடியுரிமை தாய்லாந்து அரசு அறிவிப்பு: ஐ.நா வரவேற்பு

2018-08-11@ 01:06:51

ஐ.நா: குகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் ஒருவரும், சர்வதேச குழுவினரால் சமீபத்தில் மீட்கப்பட்டனர். இவர்களில் 3 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரும் தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்துள்ளனர். தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தாய்லாந்தின் வடக்கு பகுதியில் சியாங்ராய் பகுதியில் வசிக்கின்றனர். குடியுரிமை இல்லாததால் இவர்களால் அந்த பகுதியை விட்டு வெளியே பயணிக்க முடியாது.

இந்நிலையில், குகையில் சிக்கிய 3 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் குடியுரிமை கேட்டு தாய்லாந்து அரசிடம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த புதன்கிழமை குடியுரிமை வழங்கப்பட்டு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.  இதை ஐ.நா அகதிகள் அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்த அதன் ஆலோசகர் கரோல் பேச்சலர் கூறுகையில், ‘‘தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்தாட்ட அணி சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியது, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும்’’ என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பல லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக உள்ளனர். இதனால் இவர்களுக்கு அடிப்படை உரிமைகள், சேவைகள் மறுக்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்க ஐ.நா.அகதிகள் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்லாந்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் எல்லைப் பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்க தாய்லாந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்