SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘டம்மி’ ஆனார் டிரம்ப் மாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கினார் மனைவி

2018-08-11@ 01:05:52

நியுயார்க்: குடியுரிமை சர்ச்சைகளை மீறி டிரம்ப் மாமனார் மற்றும் மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர்  டிரம்பின் மனைவி மெலானியா. இவரது பெற்றோர் விக்டர்-அமலிஜா நாவ்ஸ் ஆகியோர் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இவர்கள் தற்போது அமெரிக்க குடிமக்களாகி விட்டனர். அமெரிக்காவில் குடியுரிமையை பெற விண்ணப்பிப்பதற்கு, அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும்.

ஆனால், மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில்தான் கிரீன் கார்டு பெற்றனர். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். டிரம்ப் கருத்தை மீறி தற்போது மெலானியா பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெலானியாவின் அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நியுயார்க் மாவட்ட குடியுரிமை இயக்குனர் தாமஸ் தலைமையில் தனி நிகழ்ச்சியாக இந்த குடியுரிமை வழங்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மெலானியா பெற்றோர் வக்கீல் விளக்கம்
அமெரிக்காவின் முதல் குடிமகள் மெலானியா பெற்றோரின் வக்கீல் மைக்கேல் வில்ட்ஸ் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் முதல் குடிமகள் தனது பெற்றோருக்கு கிரீன்கார்டு வழங்க தனது அதிகாரம் மூலம் பரிந்துரை செய்தார். கிரீன்கார்டு கிடைத்தவர்கள் அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அதன் மூலம் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்து விட்டது’’ என்றார். அப்போது, ‘‘மெலானியாவின் பெற்றோர் தொடர் குடியுரிமை அடிப்படையில் குடியுரிமை பெற்றார்களா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வக்கீல் மைக்கேல், ‘‘தொடர் குடியுரிமை என்ற வார்த்தையை நான் எதிர்க்கிறேன்.

இது மிகவும் மோசமானது. மிக மோசமான வார்த்தை’’ என்றார். மெலானியாவின் செய்தி தொடர்பு துறை இயக்குனர் ஸ்டெபானி கூறுகையில், ‘‘மெலானியாவின் பெற்றோர் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. எனவே குடியுரிமை பெற்றதற்கு மெலானியா பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்