SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தள்ளுபடி ரெடி... தரம் எப்படி...?

2018-08-11@ 01:04:07

ஆடி மாதம் தொடங்கிடுச்சி... அதற்கு முன்பே தள்ளுபடி விற்பனை தொடங்கி விட்டது. வழக்கம்போல வர்த்தக நிறுவனங்களும் அதிக தள்ளுபடி வழங்கி வருகின்றன. இப்படி பாதிக்குப் பாதியோ, அதற்கும் மேலோ தள்ளுபடி வழங்குவதால் வாடிக்கையாளருக்கு அவற்றின் தரம் பற்றிய சந்தேகம் எழுவது இயற்கை. ஆனால், விலை குறைவாக கிடைப்பதால் தரத்தில் சமரசமில்லை என்பது வர்த்தகர்களின் விளக்கம். அதுபற்றி பார்ப்போம். ஆடி மாதத்தில் திருமணம் உட்பட சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதனால் ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் விற்பனை அதிகரிப்பதற்காக, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தள்ளுபடி வழங்குகின்றன.

ஜவுளியில் தொடங்கிய இந்த கலாசாரம் இன்று செல்போன் வரை விரிவடைந்து உள்ளது. அந்த வகையில், ஒரு பேன்ட் வாங்கினால் மற்றொன்று இலவசம், ஒரு புடவை வாங்கினால் 2 புடவை இலவசம், 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஒரு செல்போனுக்கு மற்றொன்று இலவசம் என ஆடி தள்ளுபடி விளம்பரங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளன. இப்படி தள்ளுபடி வழங்குவதால் தரம் குறைந்தவை என்று நினைப்பது தவறு. ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது தரமற்ற பொருட்களை தனியாக யாரும் தயாரிப்பது இல்லை. விற்பனை அதிகரிப்பதற்கான ஒரு உத்திதான் இது. எனினும், தள்ளுபடி என்ற பெயரில் விலையை சற்று கூட்டி குறைக்க வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், புதிய டிசைன் துணி வகைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பார்கள்.

அதற்குள் இருக்கின்ற சரக்கை விற்றுத் தீர்க்க வேண்டும் என்பதற்காக, லாபத்தில் குறைந்தாலும் பரவாயில்லை என்று தள்ளுபடி வழங்கி விற்பனை செய்கின்றனர். மற்றபடி தரத்தைப் பொறுத்தவரை சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதால், மும்பை, பெங்களூரைச் சேர்ந்த நிறுவனங்கள் கூட, சென்னையில் உள்ள திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, தற்காலிக விற்பனையை தொடங்கி உள்ளன. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். நல்ல கடைகள், வாடிக்கையாளர் மனதில் நம்பிக்கை பெற்ற நிறுவனங்கள் தள்ளுபடியில் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானவையாக தான் இருக்கும். குறைந்த செலவில் அதிகமான பொருட்களை அள்ளிச் செல்லலாம் என்கின்றனர் வியாபாரிகள்.

கலாஷேத்ராவில் கைத்தறி கைவினை கண்காட்சி:
நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் நடந்து வருகிறது. இதில் காஞ்சி, பெங்களூரு பட்டு, சார்ஜெட் சேலை, கலம்காரி, போச்சம்பள்ளி, மக்களகிரி துணி வகைகள், பிளாக் ஹாண்டு பிரின்ட், பாந்தினி சேலைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  கைவினைப் பொருட்கள் வரிசையில் களிமண் பொம்மைகள், மார்பிள் பொருட்கள், வெண்கல சிலைகள், மரச்சிற்பங்கள், டெரக்கோட்டா பொம்மைகள் மற்றும் பல்வேறு மாநில பாரம்பரிய நகைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இந்த கண்காட்சியை முன்னிட்டு, கைத்தறிகளுக்கு 15 சதவீதமும், கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

30 ஆண்டுகளை தாண்டி முத்திரை பதிக்கும் யங்மென் டெய்லர்ஸ்:
முப்பதாண்டுகளுக்கு மேலாக அனைத்து வகை ஆண்கள் ஆடைகள், திருமண ஆடைகள், பள்ளிச் சீருடை, கார்ப்பரேட் சீருடைகள், பிளேஸர்கள், ஷெர்வானி, வெயிஸ்ட் கோட், சஃபாரி, கால்சட்டை மற்றும் சட்டைகள் தைப்பதில் நிபுணராக விளங்கும் எம். ஆனந்த குமாரால் 1985ம் ஆண்டு யங்மென் டெய்லர்ஸ் நிறுவப்பட்டது. யங்மேன் டெய்லர்ஸ், சேைவயை சிறந்த தரத்தில் அளிப்பதோடு வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. நாங்கள் அனைத்து வகை துணி பிராண்டுகள் ரேமாண்ட், சியாராம்ஸ், அரவிந்த் விஐபி காட்டன்கள், ராம்ராஜ் காட்டன்கள், இத்தாலிய சூட்டிங்ஸ் & சர்டிங்ஸ் அனைத்து பிராண்டு லினன் துணிகள், விருந்து விழாக்களுக்கு அணியும் அழகிய வடிவமைப்பு சட்டைகள் & சூட் ரகங்களை விற்பனை செய்கிறோம்.

மலிவான விலையில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக துணிகள், கார்ப்பரேட் மற்றும் தனிநபருக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரை, மேலும் சிறப்பு விழாக்களுக்கான உயர்தர சிறப்பு ரக ஜவுளிகள், சூட்கள், டிரவுசர், சட்டைகள், மேலாடைகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கான பிற நவீனரக உபபொருட்கள் உங்கள் தேவைக்கும் திருப்திக்கும் ஏற்ற வகையில் கிடைக்கச் செய்வதே எங்கள் சிறப்பம்சமாகும் என்று யங்மென் டெய்லர்ஸ் நிறுவனர் எம். ஆனந்த குமார் தெரிவிக்கிறார்.

வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் வாங்கணுமா?
ஜெயம் & கோ சென்னையில் அண்ணாநகர், அம்பத்தூர் மற்றும் வேளச்சேரியில் கிளைகளை வைத்து வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், மின்னணுப் பொருட்கள், மின்சார சாதனங்கள், சமையலறை சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தாண்டு ஆடி விற்பனையில் வோல்டாஸ், எல்ஜி, லாய்ட், ஜெனரல் ஆகிய பல பிராண்டு ஏ.சி., டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர் போன்ற பல பொருட்கள் குறைந்த விலைகளில் வழங்கப்படுகிறது. வட்டியில்லா சுலப மாதத் தவணைத் கடன், முன்பணமில்லா கடன் போன்ற கடன் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது என்று அதன் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ் தெரித்தார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்