SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு : சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி

2018-08-10@ 15:51:17

சென்னை: திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் திருமுருகன் காந்தியை போலீஸ் விசாரிக்கலாம் என்று நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து திருமுருகன் காந்தி ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை  ஆணையத்தில் பதிவு செய்தார். போலீசாரின் கெடுபிடிகளை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களாக வெளிநாட்டிலேயே தங்கி இருந்தார். அவரை காவல்துறை கைது செய்ய பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் திருமுருகன்  காந்தியை கைது செய்ய முடியவில்லை.

மேலும், தமிழக காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ்  அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா மன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி விமான மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்ற நீதிபதி  பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்