SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு ஊழியர் ஊதிய உயர்வு முரண்பாடு பரிசீலனை செய்யும் சித்திக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

2018-08-10@ 14:36:20

சென்னை: அரசு ஊழியர் ஊதிய உயர்வு முரண்பாடு பரிசீலனை செய்யும் சித்திக் குழுவுக்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 31-ம் தேதியுடன் முடிந்த சித்திக் குழுவின் பதவிகாலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம் நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்த குழு அமைத்தது. இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜுலை 31-ம் தேதியுடன் முடிந்த சித்திக் குழுவின் பதவிகாலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்