SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற ஆணைப்படி உதகையில் யானைகள் வழிதடத்தில் உள்ள 27 ஓட்டல்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

2018-08-10@ 13:09:19

நீலகிரி: உச்சநீதிமன்ற ஆணைப்படி உதகையில் யானைகள் வழிதடத்தில் உள்ள 27 ஓட்டல்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை வக்கீல் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மசினக்குடி சுற்று பகுதிகளில் யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளன. எனவே,  அப்பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் விவசாயிகளை அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகூர், அப்துல் நசீர்,  தீபக் குப்தா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மசினகுடி மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் யானை வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில்  விதிமுறைகளை மீறி  கட்டப்பட்டுள்ள 27 கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து யானைகள் வழிதடத்தில் உள்ள 27 ஓட்டல்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்