SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் அஞ்சலி நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு : நெரிசலில் சிக்கிய ராகுல்; விளக்கம் கேட்ட மத்திய படை

2018-08-10@ 12:43:49

சென்னை: திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி  செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போலீசாரின் அலட்சியத்தால் ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அண்ணாசாலை வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் வாலாஜா சாலை வழியாகவும் ராஜாஜி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தி சென்ற பின், சீராக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்தது.

போலீஸ் அலட்சியத்தால் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டதால் நலாபுறம் இருந்தும் மக்கள் முண்டியடித்தனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் முன் வராததால் பெரும் நெரிசலில் சிக்கி தவித்தார். தனி பாதுகாப்பு அதிகாரிகள் பதை பதைப்புக்கு ஆளான போதும் எதையும் பொருட்படுத்தாமல் சாதாரண தொண்டரை போல படிகட்டுகளில் திக்குமுக்காடி நின்றிருந்தார் ராகுல்.

வெகுநேரத்திற்கு பின் காவல்துறை உயரதிகாரிகள் வந்து ராகுல்காந்தியை அழைத்துச் சென்றனர். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கான மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருக்கிறார் ராகுல்காந்தி. அவரது பாதுகாப்பில் தமிழக போலீஸ் அலட்சியம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்