SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு... நிலச்சரிவு அபாயத்தால் மக்கள் பீதி... வெள்ள அபாய எச்சரிக்கை

2018-08-10@ 12:23:56

திருவனந்தபுரம்: வரலாறு காணாத கனமழையால் கேரளாவில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து பாதுகாப்பு கருதி 22 அணைகளில் இருந்து திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படும் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,401 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 2,399 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான சிறுதோணி அணையின் ஒரு மதகு மட்டும் நேற்று திறக்கப்பட்டு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இன்று மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இடுக்கி அணையில் பிற்பகலில் மேலும் 2 மதகுகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் சரிவு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டுள்ளனர். மிக உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் பாய்தோடி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் முகத்துவார இடங்களான ஆலுவா மற்றும் எர்ணாகுளத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதே போன்று மாநிலத்தின் மற்ற அணைகளான முல்லைபெரியாறு அணை, இடமழையாறு அணை உள்ளிட்ட 22 அணைகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் அனைத்து ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்