SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூங்கா ரயில் நிலையத்தில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சி: ஒருவன் சிக்கினான், மற்றொருவனுக்கு வலை

2018-08-10@ 06:19:42

சென்னை: பூங்கா ரயில் நிலையத்தில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.கர்நாடகாவை சேர்ந்தவர் மஞ்சுநாத் (30). இவர் சென்னை மாம்பலத்தில் தங்கி, ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதம் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மஞ்சுநாத் மாம்பலத்தில் இருந்து ஆவடி செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி பூங்கா ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,  பின்பக்கமாக வந்த 2 வாலிபர்கள், மஞ்சுநாத் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட அவர், தான் கழுத்தில் அணிந்திருந்த செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டார். இருந்த போதும், அந்த வாலிபர்கள் விடாமல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுநாத் கழுத்தில் குத்த முயன்றனர். ஆனால் மஞ்சுநாத் விலகியதால் கத்தி அவரது இடது கண் பகுதியில் குத்தி காயம் ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத், ரத்த வெள்ளத்தில் திருடன், திருடன் எனக் கூச்சலிடவே, அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஒட ஆரம்பித்தனர். இந்த நிலையில் மஞ்சுநாத் சத்தம் கேட்டு, அங்கு மாற்று உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 காவலர்கள், அந்த வாலிபர்களை விரட்டிப்பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கினான், மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். படுகாயமடைந்த மஞ்சுநாத்தை  ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று மஞ்சுநாத்திடம் விசாரணை நடத்தினார். பின்னர் பிடிப்பட்ட அந்த வாலிபர் சைதாப்பேட்டையை சேர்ந்த கோகுல்(20) என்பது தெரிய வந்தது. தப்பி ஒடிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை துரத்தி சென்று பிடித்தற்காக எழும்பூர் ரயில் நிலைய குற்றப்பிரிவு காவலர் கீர்த்திவாசன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும், ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு அழைத்து பாராட்டினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்