SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளச்சல் விசைப்படகுகளில் செம்மீன், நாக்கண்டம் அதிகளவில் பிடிபட்டன

2018-08-10@ 01:03:30




குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று சுமார் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்து திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் உயர்ரக மீன்களான கணவாய், இறால், சுறா, கேரை போன்றவை அதிக அளவில் கிடைக்கிறது. இந்நிலையில் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.இந்த தடைகாலம் கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 3 படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரை திரும்பின. இதில் ஓரளவு மீன்கள் கிடைத்திருந்தன. அதைத் தொடர்ந்து நேற்று காலை சுமார் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பி வந்தன.

இந்த படகுகளில் அதிகமாக செம்மீன் மற்றும் நாக்கண்டம் மீன்கள் கிடைத்திருந்தன. ஒரு கிலோ செம்மீன் ₹25 என விலை போனது. நாக்கண்டம் ₹22 முதல் 35 வரை விலைபோனது. பற்பசை தயாரிக்கும் கம்பெனிகள் செம்மீன்களை அதிகளவில் வாங்குவதால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். விலை குறைவு என்றாலும் அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் 2 மாதம் தடைக்காலத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்