SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை விலை 10 நாளில் ஒரு ரூபாய் சரிவு: பண்ணையாளர்கள் கலக்கம்

2018-08-10@ 01:03:29

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து, பண்ணை கொள்முதல் விலை 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் முட்டை விலை ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 390 காசில் இருந்து 370 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாளில் முட்டை விலை ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது.

தமிழத்தில் புரட்டாசி விரதத்துக்கு நிகராக வடமாநிலத்தில் ஸ்ராவண் பண்டிகை கடைபிடிக்கப் படுவதால் முட்டையின் நுகர்வு குறைந்து வருகிறது. இதனால் நாமக்கல்லின் அருகாமை மண்டலமான ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலை 330 காசு வரை குறைந்துவிட்டது. அதையொட்டி நாமக்கல் முட்டை விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக என்இசிசி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் கூறினார். முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஒரு கிலோ முட்டைக்கோழி ₹73 ஆகவும், கறிக்கோழி ₹70 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 330, விஜயவாடா - 345, பர்வாலா - 310, மும்பை - 390, மைசூர் - 380, பெங்களூரு - 365, கொல்கத்தா - 395, டில்லி - 340 காசுகள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்