SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் விஷவாயு தாக்குதல் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை

2018-08-10@ 01:00:09

வாஷிங்டன்: இங்கிலாந்தில் விஷவாயு தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷ்யா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள். செர்கே ஸ்கிரிபால் ரஷ்ய உளவுப் படையை சேர்ந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். யூலியா ஏப்ரல் மாதமும், செர்கே ஸ்கிரிபால் மே மாதமும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் மீது ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷ்யா தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.

இது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறி இருக்கிறது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் கூறியதாவது: ரசாயனம் மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வதேச தடை உள்ளது.
ஆனால், அதையும் மீறி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதுவும் சொந்த நாட்டு மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை நாங்களும் ஆகஸ்ட் 6ல் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒப்புதலுக்கான கால இடைவெளி 15 நாள் ஆகும். அதன்பின் ஆகஸ்ட் 22 முதல் தடை அமலுக்கு வரும். இவ்வாறு கூறினார்.

இங்கிலாந்து வரவேற்பு: ரஷ்யா எதிர்ப்பு
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த புதிய பொருளாதார தடைக்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது. இதே போல் இங்கிலாந்து நாட்டுடன் இணைந்து செயல்படும் 20 நாடுகளும் ரஷ்யா தூதர்களை வெளியேற்றி உள்ளன. இதனால் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசம் அடைந்துள்ளது.  இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா மீது கூறுகிறார்கள். இதுதொடர்பாக ரஷ்யாவிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. ஆதாரத்தையும் காட்டவில்லை. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கடுமையாக எதிர்க்கும் நேரத்தில் வெளிப்படையான, திறந்த மனதுடைய விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்