SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 319 ஆக உயர்வு : 5.9 ரிக்டராக பதிவு

2018-08-10@ 00:55:17

மாடராம்: இந்தோனேஷியாவில் நேற்று 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேஷியாவில் உள்ள லம்ேபாக் தீவில் கடந்த மாதம் 29ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.9 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்தன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது. 1,400 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், மசூதிகள் உள்ளிட்டவை இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்நிலையில், இந்தோனேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் விராண்டோ கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்” என அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் சுமார் 355 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் லம்போக் தீவில் நேற்று ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர். தான்ஜூங் மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் திரண்டனர். அழுகையோடும், பயத்தோடும் நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடினார்கள். பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனினும், சேதவிவரம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

ஒடிசாவிலும் அதிர்வு
ஒடிசா மாநிலத்தில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. அன்குல்வை மையமாக கொண்டு பூமியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. பவுத்சதார், கட்டாக், தென்கனால் சதார், நயாகர் மற்றும் அன்குல் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்