SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமர்சனங்களுக்கு பி.வி.சிந்து பதில் தங்கத்தை இழக்கவில்லை வெள்ளி வென்றிருக்கிறேன்

2018-08-10@ 00:34:06

புதுடெல்லி: தொடர்ந்து பைனலில் தோற்பதாக தன்மீதான விமர்சனத்துக்கு பதிலளித்த இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ‘‘நான் தங்கத்தை இழக்கவில்லை, வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறேன்’’ என கூறி உள்ளார். இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த ஓராண்டு காலமாகவே இறுதிப் போட்டிகளில் தோல்வியையே சந்தித்து வருகிறார். சமீபத்தில் சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிந்து, ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் மரினிடம் தோல்வி அடைந்து வெள்ளி வென்றார். இதே போல, கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் சிந்து பைனலில் தோற்று வெள்ளியே வென்றார். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பைனலில் சக நாட்டு வீராங்கனையான சாய்னாவிடம் தோற்று சிந்து வெள்ளியே வென்றார். இறுதிப் போட்டியில் அவரது தொடர்ச்சியான தோல்வி நிபுணர்கள், ரசிகர்கள் இடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவிக்க, அவர்களுக்கு சிந்து பதிலடி தந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பதிவில், ‘‘தொடர்ந்து 2வது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தங்கத்தை இழக்கவில்லை. வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறேன். என் வெள்ளியும் மின்னும் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். நான்ஜிங் பைனலில் தோற்றாலும், மிகச்சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறேன். அதோடு தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுமையும், நிலைத்தன்மையும்தான் வெற்றிக்கு வித்திடும். அந்த வகையில் விரைவில் தங்கத்தை தட்டிப்பறிப்பேன்’’ என கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்