SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிசிசிஐ வரைவு சட்டம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

2018-08-10@ 00:31:46

புதுடெல்லி: நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைத்த பிசிசிஐ வரைவு சட்ட விதிகளில் சில திருத்தங்களுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் (பிசிசிஐ) பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு, புதிய பிசிசிஐ சட்ட விதிகள் குறித்து பரிந்துரை வழங்கியது. இதில், பிசிசிஐ அதிகாரிகள் ஒவ்வொரு முறை பதவி வகித்த பிறகு இடைவெளி விட்டு அடுத்த முறை அதே பதவிக்கு போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளுக்கு மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஒரே மாநிலம், ஒரே ஓட்டு கொள்கை’ உள்ளிட்ட சில பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. மும்பை கிரிக்கெட் சங்கம், விதர்பா, ரயில்வே சங்கங்களுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகள் 2 முறை தொடர்ச்சியாக பதவி வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2 முறைக்கு பிறகு இடைவெளிவிட்டு அதே பதவிக்கு போட்டியிட வேண்டும் என திருத்தம் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, புதிய சட்ட விதிகளை அடுத்த 4 வாரத்தில் பதிவு செய்ய வேண்டுமெனவும், அந்த விதிகளை மாநில சங்கங்கள் 30 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்