SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட் கார்னர் : குரூப் போட்டோவில் அனுஷ்காவால் எதிர்ப்பு

2018-08-10@ 00:31:02

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, லண்டனில் உள்ள இந்திய தூதகரத்துக்கு சென்றது. அங்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி உட்பட அணி நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில், கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் இருப்பது சர்ச்சையாகி உள்ளது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டதும் பல ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மற்ற வீரர்களின் மனைவிகளுக்கு இல்லாத மதிப்பு, கோஹ்லியின் மனைவியான அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் சிலர் பிசிசிஐயின் புதிய விதியை குறிப்பிட்டு, ‘‘டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணங்களில் வீரர்கள் தங்கள் மனைவியை உடன் அழைத்துச் செல்லக் கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டும் கேப்டன் கோஹ்லி அதை மதிக்காமல் மனைவியுடன் சென்று வருகிறார். இப்போது குரூப் போட்டோவிலும் அனுஷ்கா போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் என்ன நியாயம்? என கேட்டுள்ளனர். ‘‘போட்டோவில் முதல் வரிசையில் அனுஷ்காவுக்கு இடம், அணியின் துணை கேப்டனான ரகானேவுக்கு கடைசி வரிசையா?’’ என சிலரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்