SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லார்ட்சில் இரண்டாவது டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

2018-08-10@ 00:29:49

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. இந்நிலையில், 2வது டெஸ்ட் பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மழை தூறிக் கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆடுகளம் மூடி வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு பிறகு மழை ஓயத் தொடங்கியதால், இரு அணி வீரர்களும் களமிறங்குவதற்கு தயாராகினர்.

ஆடுகளத்தை சுற்றி தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், வெளிப்புற மைதானம் அதிக ஈரப்பதத்துடன் இருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.  இன்றும் லண்டனில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் 2வது போட்டியில் பேட்டிங்கை பலப்படுத்த புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதற்காக குல்தீப் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்