SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி

2018-08-10@ 00:27:57

கண்டி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், 4வது போட்டி கண்டியில் நடந்தது. இலங்கை முதலில் பேட் செய்ய மழை காரணமாக போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் சனாகா தனது முதல் அரைசதத்துடன் 34 பந்தில் 64 ரன் (5 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார்.  குஷால் பெரேரா 51 ரன் (32 பந்து), திசாரா பெரேரா ஆட்டமிழக்காமல் 51 ரன் (45 பந்து) எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் விளாசியது.

டுமினி (38 ரன், 23 பந்து), அம்லா (40 ரன், 23 பந்து) ஆட்டமிழக்க நடுவரிசை வீரர்கள் சொதப்பினர். மீண்டும் மழை பெய்ததால் 21 ஓவரில் 190 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி 2 ஓவரில் கைவசம் 3 விக்கெட் இருக்க 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா இருந்தது. 20வது ஓவரை வீசிய திசாரா பெரேரா ஒரு விக்கெட் வீழ்த்தி 8 ரன் மட்டுமே தந்தார். சுரங்கா லக்மல் கடைசி ஓவரின் 2வது பந்தில் மில்லரை வெளியேற்ற தென் ஆப்ரிக்காவின் நம்பிக்கை சரிந்தது. கடைசி 3 பந்தில் அந்த அணி 2 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்ரிக்கா 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்னுடன் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 11 தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 5வது மற்றும் கடைசி போட்டி கொழும்புவில் நாளை மறுதினம் நடக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்