SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்

2018-08-10@ 00:26:36

* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், 2வது டெஸ்டில் கரனை சமாளிக்க இடதுகை வேப்பந்து வீச்சாளரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை வலைப்பயிற்சியில் அணி நிர்வாகம் ஈடுபடுத்தியது. அர்ஜூனின் இடதுகை வேகத்தை கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு பயிற்சி செய்துள்ளனர்.
* இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுமியாஜித் கோஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே மாநிலத்தை சேர்ந்த 18 வயது பெண் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்க சவுமியாஜித் கோஸ் சென்றிருந்த போது இப்புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, தன் மீது குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணையே சவுமியாஜித் கோஸ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

* வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
* உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக குழு, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. இதன்படி, தேர்வுக்குழு உறுப்பினர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ60 லட்சத்தில் இருந்து ரூ90 லட்சமாகவும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ80 லட்சத்திலிருந்து ரூ1 கோடியாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத்தும், தேர்வுக்குழு உறுப்பினர்களாக தேவங்க் காந்தி, சரன்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர். இதே போல, ஜூனியர் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ60 லட்சமாகவும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ65 லட்சமாகவும், மகளிர் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ரூ25 லட்சமும், தேர்வுக்குழு தலைவருக்கு ரூ30 லட்சமாகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

 • WillaHurricaneMexico

  மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்