SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 3வது சுற்றில் ஷரபோவா

2018-08-10@ 00:26:02

மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா அபாரமாக ஆடி 3வது சுற்றுக்கு முன்னேறினார். கெர்பர், பிளிஸ்கோவா அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். கனடாவின் மான்ட்ரியலில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா, சக நாட்டவரான டாரியா கசாட்கினாவை (12வது ரேங்க்) எதிர்த்து விளையாடினார். அதிரடியாக ஆடிய ஷரபோவா 2 கேம்களை மட்டுமே இழந்து, 66 நிமிடத்தில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 31 வயதாகும் ஷரபோவா 3வது சுற்றில் பிரான்சின் கரோலினா கார்சியாவை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 1-6 என்ற நேர் செட்களில் பிரான்சின் அலிஷி கார்னட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

3 வாரத்திற்கு முன்பு விம்பிள்டன் பட்டம் வென்ற கெர்பர், அதன்பிறகு விளையாடிய முதல் போட்டியிலேயே தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, 9ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 2-6 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சிடம் தோல்வியை தழுவினார். நடால் அசத்தல்: டொரான்டோ மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்சின் பெனோயிட் பைரேவை வீழ்த்தி 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட்களில் கனடாவின் போலன்ஸ்கையையும், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 1-6, 7-6, 7-6 என்ற செட்களில் ஹங்கேரியின் புக்சோவிக்சையும், குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் சக நாட்டவரான கோரிக்கையும் வென்று 3ம் சுற்றில் நுழைந்தனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்