SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆக.12ல் தாகில் ரமானி பதவியேற்பு: ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம்

2018-08-10@ 00:24:59

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தாகில் ரமானி வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 7ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை  உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தாகில் ரமானியை நியமித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டது.

 தாகில் ரமானி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1958 அக்டோபர் 3ம் தேதி பிறந்தார். 1982ல் சட்டப் படிப்பை முடித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். கடந்த 2001 ஜூன் 26ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, தாகில் ரமானி வரும் ஞாயிற்றுக்கிழமை  பதவியேற்கவுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்