SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் மழை மீட்பு பணிகளில் தமிழக அரசு உரிய உதவிகளை மேற்கொள்ளும்: முதல்வர் எடப்பாடி அறிக்கை

2018-08-10@ 00:24:46

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கேரளாவின் சில மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.  கேரள மக்களுக்கு இது சொல்லொன்னா துயரை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளில்  உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது கடினமான பணிகளில் ஒன்று.

தமிழக மக்கள், அரசுத்தரப்பில் மீட்பு பணிகளில் உரிய உதவிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹5 கோடியை கேரள அரசுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். கேரள அரசுக்கு மீட்பு பணிகளில்  பிற உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்