SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் மொழிக்காகவே வாழ்ந்தவர் கருணாநிதி, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் புகழாரம் : புத்தக திருவிழாவில் வாசகர்கள் அஞ்சலி

2018-08-09@ 13:08:04

தர்மபுரி: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் வாசகர்கள் அஞ்சலி செலுத்தினர். தர்மபுரி புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். மாலை அவரது பேச்சுக்குப் பிறகு, மேடையிலேயே மறைந்த மு.கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது. அவரது படத்துக்கு ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, புத்தகத் திருவிழாவின் தலைவர் டாக்டர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழ் மொழிக்காகவும், இனத்துக்காகவும் மகத்தான தொண்டு செய்தவர் கருணாநிதி. அவர் மறைவு எழுத்துலகுக்குப் பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் அவர் போராட்டக் களங்களை சந்தித்தவர்.  இளமை தொடங்கி இறுதி வரை தமிழருக்காக அவரது மூச்சு இயங்கியது. இலக்கியத்தையும், எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் மதித்துக் கொண்டாடியவர் அவர். உலகத் தமிழ் மாநாடு, வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை போன்றவை அவரது மகத்தான சாதனைகள். தமிழ் உலகமும், இனமும், மக்களும் என்றும் அவர் நினைவைப் போற்றுவர்.

பெரியார் வழி வந்த எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதியமான்கோட்டை எர்ரப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் நாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் துரைராஜ் மற்றும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அமிர்தம், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்