SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுபது கோடி இந்தியர்களுக்கு ஆபத்து!

2018-08-07@ 10:27:35

நன்றி குங்குமம் முத்தாரம்

வெயில் அதிகரித்து மழை குறையும் பருவநிலை மாறுபாடுகளால் இந்தியாவின் ஜிடிபி 2.8 சதவிகிதம் குறைந்து 2050ஆம் ஆண்டு மக்களின் வாழ்க்கை முறையே மாறும் என உலகவங்கி எச்சரித்துள்ளது. மேற்சொன்ன சூழல்களால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டம்தான். ஏறத்தாழ 10 சத விகித அளவு பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்படவிருக்கிறது. வெப்பநிலை உயர்வால் இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் பெய்யும் மழையின் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாறுபாட்டால் 2050 ஆம் ஆண்டு ஏற்படும் பொருளாதார இழப்பு 1.1 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மாவட்டங்களில் ஏற்படும் நுகர்வு இழப்பு மதிப்பு 400 பில்லியன் டாலர்கள். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் 9 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுவதாக கருதப் படுகிறது. மகாராஷ்டிராவிலுள்ள பத்து மாவட்டங்கள் அதிக பருவ மாறுதல் விளைவுகளைக் காணவிருக்கின்றன. “வெப்பநிலை மாறுதல் என்பது மெல்ல நிகழும் பேரழிவு. இதுபற்றி நாம் விவாதிக்கவேண்டியது அவசியம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் முத்துக்குமாரமணி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்