SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இ-சிகரெட்டுக்கு தடை!

2018-08-07@ 10:18:12

நன்றி குங்குமம் முத்தாரம்

அண்மையில் தமிழக அரசு சிகரெட்டைவிட குறைந்த நச்சுத்தன்மை கொண்ட இ-சிகரெட்டுகளை கடைகளில் விற்கவும் தடைவிதித்துள்ளது. பேட்டரிகளில் இயங்கும் இ-சிகரெட்டுகள் பல்வேறு சைஸ்களில் விற்கப்படுகிறது. வடிவிலுள்ள நிக்கோடினை எரியூட்டி சிகரெட் புகைப்பதன் அனுபவத்தை தருகிறது இ-சிகரெட்.  

இ-சிகரெட்டை இ-ஹூக்கா, இ-சிக்ஸ், மோட்ஸ், வேப்பென்ஸ், வேப்ஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இ-சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகள், சுருட்டு, பேனா, யுஎஸ்பி ட்ரைவ் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வெளியாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி இ-சிகரெட்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபிளேவர்கள் உண்டு. இதில் சோளம், ஏலக்காய், செர்ரி ஆகியவை சூடாக்கப்படும்போது ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன.  

“இ-சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகளை விட நச்சு குறைந்தவை.புகைபிடிப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் இதனை வரவேற்கலாம்” என்கிறார் அப்பல்லோவின் புற்றுநோய் மருத்துவர் ஆர்.பாலாஜி. புதிய வகை வாசனையில் வெளியிடப்படும் இ-சிகரெட்கள் இளைஞர்களை ஈர்த்துவருவது அடிமைத்தனத்தின் வடிவம் மாறியுள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்