SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனித்துவமாக யோசித்தால் வெற்றி!

2018-08-07@ 10:16:09

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்டார்ட் அப் மந்திரம்

2016 ஆம் ஆண்டில் StayZilla, Dazo ஆகிய நிறுவனங்கள் தோற்று வீழ்ந்ததோடு, 200க் கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் மூடப்பட்டுவிட்டன. கிராப்ட்ஸ்வில்லா, சாஃப்ட்பேங்கின் முதலீட்டில் வாழும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் பெருமளவு ஆட்குறைப்பை செய்துவருகின்றன. எங்கு தவறு? என்ன பிரச்னை?

Zomato, Swiggy ஆகிய நிறுவனங்கள் உணவுத்துறையில் தாக்குப்பிடிக்கின்றன என்றால் அதைப் பின்பற்றிய பிற நிறுவனங்கள் என்னவாயின? குறிப்பிட்ட ஸ்டார்ட்அப் ஐடியாவை முதலில் தேர்ந்தெடுப் பவருக்கான ஆதாயங்கள் பின்வருபவர் களுக்குக் கிடைக்காது.

ஃபிளிப்கார்ட்டின் ஐடியாவைக் காப்பி யடித்து எக்கச்சக்க கம்பெனிகளைத் தொடங்கி, பணத்தை இறைக்கலாம். மக்களின் மனதில் பதிய தெளிவான பிளான்களும் விநியோக முறைகளும் முக்கியம். இந்த அம்சங்கள் இல்லையெனில் தொடங்கும் கம்பெனியில் செய்யும் முதலீடு, கடலில் கரைத்த பெருங்காயம்தான்.

ஒவ்வொரு துறையிலும் முன்னணி கம்பெனிகள் நிச்சயம் இருப்பார்கள். இ-வணிகத்தில் ஃபிளிப்கார்ட்,  அமேசான்; ஹோட்டலா? ஓயோ ரூம்ஸ், வாடகைக்காரா? உபர், ஓலா என இவர்களை உங்கள் ஸ்டார்ட்அப் முந்தி கின்னஸ் படைக்கும் என வறட்டு பிடிவாதம் செய்யாமல் தனித்துவமாக யோசியுங்கள். இத்துறையில் வேர்பிடித்தவர்களோடு மோதாமல் புதிய வாய்ப்புகளை விழுதாக நினைத்து ஏறி ஜெயிக்கப் பார்ப்போமே?உங்கள் ஸ்டார்ட்அப்பை சந்தையில் வஜ்ரமாக்க இதோ ஸ்டார்ட்அப் புத்தகங்கள்…  
 
Creativity Inc. by Ed Catmull with Amy Wallace  

அனிமேஷனில் அதிரடியாக சாதிக்கும் பிக்ஸாரின் சாதனைக்கதை. பிக்ஸார் படிப்படியாக தடைகளை உடைத்து திரைப்படத்தில் தன்னை எப்படி நிரூபித்தது என்பதை படித்தால் ஸ்டார்ட்அப் உற்சாகம் குபீரென உங்களுக்குள்ளும் பொங்கும்.
 
Zero to One - Peter Thiel with Blake Masters  

மார்க் ஸூக்கர்பெர்க், எலன் மஸ்க் ஆகியோர் பரிந்துரைத்த ஸ்டார்ட்அப் நூல் இது. 2012 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல் கலையில் படித்த பீட்டர் தியல் எழுதிய நூல் இது.
 
The Checklist Manifesto - Atul Gawande  

எழுதியவர் அறுவை  சிகிச்சை  வல்லுநர் என்றாலும் ஒரு  வேலையை செக்லிஸ்ட் போட்டு எப்படி  கவனமுடன் செய்து ஜெயிக்கலாம் என்று சொல்லும் டிப்ஸ்கள் ஈர்க்கின்றன. இதோடு மார்க்கெட்டிங் குறித்த Sell: The Art, the Science, the Witchcraft-Subroto Bagchi நூலையும் வாசிக் கலாம்.

(உச்சரிப்போம்)
கா.சி.வின்சென்ட்
தமிழில்: ச.அன்பரசு


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்