SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் : அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

2018-08-07@ 02:40:22

சென்னை: அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஸ்ரீதரன், பாரதி, சம்பத்குமார், தேவராஜன், நடராஜன், ஜெயராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடுதல் ஆணையர் கவிதா மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமலும், முகாந்திரமின்றியும் சிலை கடத்தல் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பற்றியும், துறையை பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால், மக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என ஒரு தவறான மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையை பொன்.மாணிக்கவேல் டார்க்கெட் செய்கிறார். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி துணையுடன் இத்துறையை அழிக்க முயற்சி செய்கின்றனர். குஜராத்தில் ராஜ, ராஜசோழன் சிலையை மீட்க திமுக ஆட்சி காலத்தில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முயற்சி செய்தும் சிலை மீட்கப்படவில்லை. ஆனால், பாஜ ஆளும் குஜராத்தில் பொன்.மாணிக்கவேல் சிலையை மீட்டு வந்ததில் அரசியல் இருக்கிறது. தொடர்ந்து, அதிகாரிகள், ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்கள். இதை தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் வெளியேறி விட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்