SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-08-06@ 10:52:24

ஏதென்சில் காட்டுத்தீ

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே உள்ள கினேடா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடுகின்றனர்.

பாரம்பரிய போட்டி

போஸ்னியா நாட்டின் மோதர் நகரில் பாலத்திலிருந்து குதிக்கும் பாரம்பரிய போட்டி நடைபெற்றது. 452வது ஆண்டாக நடந்த இப்போட்டியில் 40 நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர். நெரேட்வா ஆற்றின் மீது 82 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்திலிருந்து நீச்சல் வீரர்கள் குதிப்பதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்தப் பாலம் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

கொளுத்தும் வெயில்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. கொளுத்தும் வெயிலை சமாளிப்பதற்காக, ஈபிள் டவர் அருகே செயற்கை நீரூற்றுகள் சுற்றுலா பயணிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றன.


பார்தினான் சீரமைப்பு

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சின் அக்ரோபோலிஸ் மலையில் உள்ள 2,500 ஆண்டு பழமையான பார்தினான் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.

ஓய்வு எடுக்கும் குரங்குகள்

குரங்குகள் என்றதுமே மரத்திற்கு மரம் தாவி, வாயில் எதையாவது நொறுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆடி, ஓடி, களைத்துப் போய் மனிதர்களைப் போல் குரங்குகள் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை பலரும் பார்த்திருக்க மாட்டோம். அப்படிப்பட்டவர்களுக்காக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள உனோ மிருகக்காட்சி சாலையில் எடுத்த புகைப்படம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்