SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வி ஒருநாள் தொடரை கைப்பற்றி தென் ஆப்ரிக்கா அசத்தல் : ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆட்ட நாயகன்

2018-08-06@ 02:31:52

கண்டி: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 78 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. பெல்லெகெலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்தது. ஹாஷிம் அம்லா 59 ரன் (59 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 102 ரன் (89 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஜீன் பால் டுமினி 92 ரன் (70 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), டேவிட் மில்லர் 51 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), பெலுக்வாயோ 24* ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் திசாரா பெரேரா 4, லாகிரு குமாரா 2, அகிலா தனஞ்ஜெயா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 364 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை 45.2 ஓவரில் 285 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா அதிகபட்சமாக 84 ரன் (66 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), அகிலா தனஞ்ஜெயா 37, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 32, குசால் மெண்டிஸ் 31, குசால் பெரேரா 27, தரங்கா 19 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் லுங்கி என்ஜிடி 4, பெலுக்வாயோ 3, ஷம்சி 2, முல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். சதம் விளாசிய ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 78 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றியது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 3-0 என முன்னிலை வகிக்க, 4வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் 8ம் தேதி நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்