SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புது வரவு ஸ்கூட்டர்கள்... ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

2018-08-05@ 00:32:44

ஹீரோ நிறுவனம், ஹீரோ எலெக்ட்ரிக் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கி, எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஹீரோ நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே டூயட் இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதுபோலவே, தற்போது அறிமுகம் செய்ய உள்ள ஸ்கூட்டரும் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார், 14 என்எம் டார்க் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர், 6.5 நொடியில் 0-60 கி.மீ வேகத்தை தொட்டுவிடும் அளவிற்கு பிக்-அப் கொண்டது. இந்த ஸ்கூட்டர் ஒரு முழு சார்ஜில் 65 கி.மீ தூரம் வரை செல்லும். விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.

சுஸூகி பார்க் மேன் ஸ்டிரீட் 125
இது, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேக்ஸி ஸ்கூட்டர்களின் டிசைனை இந்த பார்க்மேன் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் புல் பாடி ஒர்க், உயரமான விண்ட் ஷீல்டு, பின்புறம் சற்று உயரமான சீட், எல்இடி முகப்பு விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல், அலாய் வீல், அட்ஜெஸ்ட்டபில் பூட் பெக் பொசிசன் ஆகிய வசதிகள் இதில் உள்ளது. இந்த பைக்கில், 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சுஸூகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் இன்ஜின் வேறு விதமாக டியூன் செய்யப்பட்டு இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 10.7 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இது, ₹69 ஆயிரம் என்ற விலையில் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுவென்டி டூ ப்ளோ
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான டுவென்டி டூ என்ற நிறுவனம் பிளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆட்டோ எஸ்போவில் அறிமுகப்படுத்தியது. லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், டிஜிட்டல் கன்சோல், எலெக்ட்ரானிக் பிரேக்கிங், எல்இடி லைட், ஜியோ பென்சிங் ஆகிய வசதிகள் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் லித்தியம் இயான் பேட்டரியில் இயங்கக்கூடிய டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 5 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஏறிவிடும். முழு பேட்டரி சார்ஜில் 80 கிமீ வரை இயங்கும். அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 60 கி.மீ. வேகத்தில் செல்லும். பல்வேறு காரணங்களுக்காக அறிமுகம் தாமதமாகி வருகிறது.

ஹீரோ டூயட் 125
ஹீரோ நிறுவனம் தங்களது டூயட் மற்றும் மீஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய பைக்குகளின் 125 சிசியை கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினர். விரைவில் அந்த பைக்குகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டூயட் 125 பைக்கை பொறுத்தவரை பழைய டூயட்டைவிட சில ஸ்டைலிங் மற்றும் அம்சங்களில் சில அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கிய அம்சமாக, ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6,750 ஆர்பிஎம்மில் 8.7 பிஎச்பி பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் ₹57,000 என்ற விலையில் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் சிரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் களம் இறங்க தயாராகியுள்ள டிவிஎஸ் நிறுவனம் சிரியான் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் சிறந்த பெர்பாமென்ஸ் ஸ்கூட்டராக இருக்கும். இது, 5.1 நொடியில் 0-60 கி.மீ. வேகத்தை பிக்-அப் செய்துவிடும். மேலும், இந்த ஸ்கூட்டர் முழு சார்பில் 80 கி.மீ வரை பயணம் செய்யும். இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 60 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜை பெற்று விடும். விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

மஹிந்திரா நிறுவனம், தான் ஏற்கனவே தயாரித்து வரும் கெஸ்டோ என்ற ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர தயார்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜென்ஸி என்ற ஸ்கூட்டரை அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. அந்த ஸ்கூட்டரை தயாரித்த அனுபவத்தை கொண்டு இந்த ஸ்கூட்டரை தயாரிப்பதால் இதை வெற்றிபெற வைக்க பல திட்டங்களை வைத்துள்ளது. இந்த ஸ்கூட்டர் எப்பொழுது வெளியாகவுள்ளது என்பதை அந்நிறுவனமே இன்னும் முடிவு செய்யவில்லை.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125
டூயட் ஸ்கூட்டர் உடன் இந்த ஸ்கூட்டரையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவுள்ளது. புதிய ஸ்கூட்டரின் டிசைன் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டூயட் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் ஒரே மாதிரி டியூன் செய்யப்பட்ட ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஐ3எஸ் ஸ்மார்ட் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இதில் டிஜிட்டல் டிஸ்பிளே, பூட் லைட், மொபைல் சார்ஜிங் சாக்கெட், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை டூயட்டை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்