SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடினாலே தள்ளுபடிக்கு பஞ்சமில்லே: கிளம்புங்க ஷாப்பிங்குக்கு

2018-08-03@ 00:35:25

ஆடி என்றாலே பொதுமக்களுக்கு தள்ளுபடி என்ற எண்ணம் தற்போது  மேலோங்கி வருகிறது. இந்த ஆடி தள்ளுபடியின் ரகசியம் தான் என்ன பார்ப்போம்! விற்பனையை அதிகரிக்க யோசித்த வியாபாரிகள்: ஆடி மாதம் என்றாலே சிறப்பு சலுகை, தள்ளுபடி போன்றவற்றை மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார்கள்  வியாபாரிகள். முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே புத்தாடைகள் வாங்கப்படும். அதுவும் தீபாவளிக்கு தான். இன்னும் சிலர் சற்று வசதி படைத்தவர்கள் பொங்கல் பண்டிகைக்கு புது ஆடைகளை வாங்குவார்கள். இதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறை. இதனையடுத்து திருமணம் போன்ற விசேஷங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்களுக்கு புது துணி எடுத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது.

இதனால் பண்டிகளை காலங்களில் மட்டுமே ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களைகட்டும். மற்றமாதங்களில் கடைகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி வியாபாரம் இன்றி காணப்படும்.  காலப்போக்கில் குடும்ப வருவாய்க்கு ஏற்றபடி பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிக்கு சம்பந்தபட்டவர்கள் மட்டும் புத்தாடை வாங்கி அணிந்து கொண்டாடுவார்கள்.  ஆடி மாதம் முழுவதும் தள்ளுபடி விலையில் விற்பனை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பு வேறு. சொல்லவா வேண்டும் நம் மக்களுக்கு. நாம் தான் இலவசம் என்றாலே எல்லாவற்றையும் மறந்து விடுமோ, படையெடுக்க ஆரம்பித்தனர் கடைகளுக்கு. டிவி இல்லாத வீடே இல்லை எனலாம்.

இவ்வாறு குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகி போன டிவியில், மணிக்கொரு தரம் ‘ஆடி தள்ளுபடி, ஆடி தள்ளுபடி’  என்று மனதில் பதிய வைக்கும் விளம்பரங்கள். முக்கியமாக குழந்தைகளையும், பெண்களையும் குறி வைத்தே பெரும்பாலான விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு ரகத்திற்கும் வெவ்வேறு சதவீதத்தில் தள்ளுபடி  வேறு அறிவிக்கப்படுகிறது.  விளம்பரத்தை டிவியில் பார்த்துவிட்டு எந்த கடையில் எவ்வளவு தள்ளுபடி, எந்த கடையில் எந்த துணியை வாங்கலாம்  என்பதையெல்லாம் கணித்து கடைகளை தேர்வு செய்ய கைகொடுக்கின்றன இந்த விளம்பரங்கள். துணிகளுக்கு மட்டுமே தள்ளுபடி என்றிருந்த நிலை மாறி தற்போது நகை கடைகளும் ஆடியில் தள்ளுபடியை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இன்னும் ஒருபடி மேலே சென்று வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாசிஷ்மெஷின், ஏசி, டிவி, உள்ளிட்வற்றிற்கும் ஆடி மாதத்தில் குறிப்பிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் கணிசமான லாபத்தை சம்பாதித்து வருகின்றனர். பக்கத்து வீட்டில் எடுத்துவிட்டார்களே, உறவினர் வீட்டில் ஆடி தள்ளுபடியில் ஆடைகள் வாங்கிவிட்டார்களே. நாம் என்று கடைக்கு செல்வது, எப்போது பர்சேசிங் செய்வது என்பது மட்டும் தான் பெரும்பாலான பெண்களின் மனதில், நினைவில் நிற்கின்ற ஒரே விஷயமாகும். ஆடியில் துணி வாங்கவில்லை என்றால் பணம் இல்லாதவர்கள் என்று கேலியாக பார்ப்பதால் இது கவுரவ குறைச்சலாக கூட கருப்படுகிறது. இதனால் ஆடித்தள்ளுபடியில் ஆடைகளை அள்ளாதே ஆளே தற்போது இல்லை என்றே கூறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்