SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படை விரட்டியடிப்பு: குறைந்தளவு மீன்களுடன் திரும்பினர்

2018-07-30@ 02:10:35

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் விரட்டியதால், குறைந்தளவு மீன்களுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று மாலை நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றபோது, அங்கு ரோந்து வந்த  இலங்கை கடற்படையினர் இப்பகுதிக்குள் நுழையக் கூடாது என்று மீனவர்களை எச்சரித்து விரட்டினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வேறுவழியின்றி ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளிலேயே மீன்பிடித்தனர். இரவு முழுவதும் மீன்பிடித்து விட்டு நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினர். படகுகளில்  குறைந்தளவு மீன்களே இருந்தது. குறிப்பாக இறால் வரத்து முற்றிலுமாக இல்லை. இதனால் படகுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையினரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், நடுக்கடலில் மீன்பிடிக்க முடியவில்லை. மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிக்கின்றனர்.  இதனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடித்து குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. மத்திய  அரசு இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு  ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மீன்பிடி தொழிலில் நீடிக்க முடியும். இல்லையென்றால் நாங்கள் மீன்பிடி தொழிலை விட்டு  வேறு தொழிலுக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்