மக்களுக்கு இன்னொரு அடி

Date: 2013-03-03@ 06:52:28

‘‘நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறீர்கள்....’’ இது மக்களை பற்றி கவலைப்படாத மன்னனை பார்த்து நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசும் வசனம். அந்த மன்னனின் மனோநிலையை பிரதிபலிப்பதுபோலத்தான் மத்திய பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் அமைந்துள்ளன. விலைவாசி உயர்வால் திணறும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேலும் ஒரு அடியாகவே பட்ஜெட் உள்ளது.மேலோட்டமாக பார்த்தால் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தோன்றும். ஆனால், டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு ரத்து, தத்கல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் மீது மறைமுக கட்டண உயர்வு சுமத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதமே ஸி6,600 கோடி அளவுக்கு பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதையும் மறந்துவிட முடியாது. இது தவிர, பட்ஜெட்டில் எல்.பி.ஜி, பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வது உட்பட சரக்கு கட்டணம் 5.8% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.தமிழகத்துக்கு 14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னை எழும்பூர் &நாகர்கோயில்& கன்னியாகுமரி 2வது அகலப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை & திண்டுக்கல் இரட்டை பாதையின் கதியும் இதேதான். பொள்ளாச்சி & கிணத்துக்கடவு இடையிலான ரயில்பாதை பணிகள் முடிக்கப்படும் என்று வழக்கம்போல இந்த பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, பணிகள் ஆமை வேகத்தில்தான் நடக்கின்றன. ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் உணர்கின்றனர்.

இந்த நிலையில், 14 புதிய ரயில்கள் எப்போது ஓடத் தொடங்கும் என்று தெரியவில்லை. மொத்தத்தில், ரயில்வேக்கான வளர்ச்சி திட்டங்கள், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் பற்றி குறிப்பிடப்படாத நிலையில், சாதாரண, நடுத்தர மக்களுக்கு ரயில்வே பட்ஜெட் மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.சரி, பொது பட்ஜெட் நிலை என்ன? தேர்தலுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கவர்ச்சிகரமான திட்டங்கள், வரிச்சலுகைகள், வருமான வரி உச்சவரம்பு உயர்வு இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை அந்த எதிர்பார்ப்பை காற்றுபோன பலூனாய் சுருங்க வைத்து விட்டது.குறிப்பாக, மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் ஏமாற்றமடையும் வகையில் வருமான வரி உச்ச வரம்பு ஸி2 லட்சத்தில் இருந்து உயர்த்தப்படவில்லை. ஸி5 லட்சம் வரை வருமானம் உள்ளோர் வருமான வரியாக கிட்டத்தட்ட ஸி31,000 செலுத்த வேண்டி உள்ளது. ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி என்பதை போல்,ஸி2,000 மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு ஸி1 கோடிக்கு மேல் வருமானம் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு 10% கூடுதல் வரி இந்த ஆண்டு மட்டும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 120 கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகையில் இந்த பட்டியலின் கீழ் வருவோர் 42,800 பேர் மட்டுமே.இந்த எண்ணிக்கையை நிதியமைச்சர் சிதம்பரமே கூறியுள்ளார். இந்த குறைந்த அளவிலான எண்ணிக்கையில் உள்ளவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி போதுமான வருமானத்தை அரசுக்கு ஈட்டித்தருமா? என்பது கேள்விக்குறியே. அதை ஈடுகட்ட மறைமுகமாக சாதாரண மக்கள் மீதுதான் வரிச்சுமை விழும்.

மேலும், பட்டியலில் உள்ள பணக்காரர்கள் தங்கள் உண்மையான வருமானத்தை வெளியிடுவார்களா? என்பதும் சந்தேகமே.உயர்ந்த ரக ரத்தினக்கற்கள் மீதான சுங்க வரி 10%ல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலை குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க அரிசியில் சோறு சமைத்து, வைரக்காய் போட்ட சாம்பாரும், நவரத்தின பொரியலும் சாப்பிடுவோருக்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சியை அளிக்கலாம். ரத்தினக்கற்கள் விலை குறைவதால் சாதாரண ஏழை மக்களுக்கு பயன் என்ன? பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் 2 ஆண்டுகள் அமல்படுத்தாமல் தள்ளிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவர்கள் 2 ஆண்டுகள் வரி ஏய்ப்பு செய்ய அரசே அனுமதி அளிக்கிறது என்று அர்த்தமாகாதா? இந்த வரி ஏய்ப்பால் அரசுக்கு பலப்பல கோடி நஷ்டம் ஏற்படுமே?மானியத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட ஸி26,571 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய குறைப்பால் விலைகள் மேலும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கான கடன் ஸி1.25 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பலன்கள் சாதாரண விவசாயிகளுக்கு போய் சேருமா? என்று சந்தேகம் கிளப்புகின்றன எதிர்க்கட்சிகள். ரசாயன உரங்களுக்கான விலையும் குறைக்கப்படவில்லை. பண வீக்கம் 6.6% ஆக உள்ள நிலையில், அதை குறைக்கவும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை.‘பசி வர ஒருபக்கம் மாத்திரைகள்; மறுபக்கம் பட்டினியால் யாத்திரைகள்’ என்ற நிலையில் நாடும் மக்களும் இருக்கும் வரை, 2025ம் ஆண்டு இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும் என்று கூறுவது, கடல் வற்றி கருவாடு தின்ன காத்திருந்து குடல் வற்றி ஏமாந்த கொக்கின் கதையாகத்தான் முடியும்.

sms spy app phone monitoring software spy apps free
abilify and coke link abilify and coke
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons

Like Us on Facebook Dinkaran Daily News