SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்

2018-07-25@ 17:51:01

டெல்லி: மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும் NEW DZIRE கார்களில், விபத்தின் போது தலை அடிபவடுவதில் இருந்து காப்பாற்றும் 'Air Pack Controller Unit'-ல் பழுது இருக்க வாய்ப்புள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து Air Pack Controller Unit'-ல் பழுது இருப்பதை கண்டறிந்து இலவசமாக சரி செய்யும் பணி ஜூலை 25-ம் தேதி முதல்
நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுதை சரி செய்ய கார் டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்