SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாவிற்கு சுவையோடு சத்தான ஹோம் மேட் உணவு பொருட்களை விற்கும் ட்ரெட்டி ஃபுட்ஸ்(TredyFoods)

2018-07-23@ 12:02:57

இன்றைய அவசர காலத்தில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது. கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை வாங்கி சுவைக்கும் மனநிலைக்கு மாறி விட்டனர். கடைக்கு செல்லக்கூட நேரம் இல்லாத நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கின்றனர். ஹோம் மேட் பொருட்களுக்கு என்றைக்குமே வரவேற்பு அதிகம்தான். உண்ணும் உணவுப் பொருட்களில் சுவையோடு சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எனவேதான்  மக்களின் தேவையை உணர்ந்த tredyfoods.com  ஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.
 
ஹோம் மேட் கோவா நெய் ஜாமுன் :
குளோப் ஜாமுன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் குளோப் ஜாமுன் மாவுகளை வாங்கி செய்து சாப்பிடுகின்றனர். அதே நேரத்தில் ஒரிஜினல் கோவாவில் செய்யப்பட்ட நெய் ஜாமுனின் ருசிக்கு வேறு எதுவும் ஈடு இணையில்லை என்றே கூற வேண்டும். என்ன சுவைக்க நாவிற்கு ஆசையாக இருக்கிறதா? tredyfoods.com உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரெடியாக இருக்கிறது. விரல் நுனியில் ஆர்டர் செய்து நாவின் உத்தரவை நிறைவேற்றுங்கள்.  

வீட்டு கை முறுக்கு, அதிரசம் :
பண்டிகையோ, திருவிழாவோ நம் வீட்டில் முறுக்கு அதிரசத்திற்கு தனி இடமுண்டு. அரிசி மாவில் செய்யப்பட்ட இந்த தின்பண்டங்களை காலம் காலமாக மக்கள் சுவைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். கை முறுக்கின் சுவையும், அதிரசத்தின் அலாதியான ருசியையும் சாப்பிட ஆர்வமாக இருப்பவர்கள் உடனே tredyfoods.com மில் ஆர்டர் செய்யுங்கள் உங்களின் வீடு தேடி வரும்.
 
நிலக்கடலை இனிப்பு உருண்டை :
நிலக்கடலையை தனியாகவே பலரும் சாப்பிடுவார்கள். அதோடு நாட்டு சர்க்கரை சேர்த்து கூடவே சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்பட்ட நிலக்கடலை இனிப்பு உருண்டையின் ருசியே அலாதிதான். tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் நிலக்கடலை இனிப்பு உருண்டை பெண்களுக்கு ஏற்ற சத்தான தின்பண்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அம்மாவின் கைப்பக்கும் அப்படியே இருக்கும். ஒருமுறை ருசித்தால் பின்னர் அதனை விடவே மாட்டீர்கள்.

இறால் ஊறுகாய் :
கடல் உணவுகளில் இறாலின் சுவை அலாதியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறால் சாப்பிட விரும்புவார்கள். நாம் நினைத்த நேரத்தில் இறால் வாங்கி சமைத்து சாப்பிட முடியாது. எனவேதான் இறால் பிரியர்களுக்காகவே ஊறுகாய்களை விற்பனை செய்கிறது tredyfoods.com.
ஊறுகாய் என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதுவும் இறால் ஊறுகாய் என்றால் கேட்கவே வேண்டாம். உடனே ருசித்து பார்க்க ஆர்வமே அப்ப யோசிக்கவே வேண்டாம் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வரும் இறால் ஊறுகாய்.
 
பேரிச்சை கேரட் கேக் :
வீட்டில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு கேக் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உண்டு. அதுவும் சுவையும் சத்துக்களும் கொண்ட கேக் கொடுத்தால் போதும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே tredyfoods.com மில் ஹோம் மேட் பேரிச்சை கேரட் கேக் விற்பனை செய்யப்படுகிறது. இரும்பு சத்து நிறைந்த பேரிச்சை, வைட்டமின், கால்சியம், கனிம சத்துக்களைக் கொண்ட கேரட், முந்திரி, உலர் திராட்சை, கால்சியம் சத்து நிறைந்த பால் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு சுவையோடு தயாரிக்கப்பட்டது பேரிச்சை கேரட் கேக். இது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு டிபன்பாக்ஸ்சில் கொடுத்து விட ஏற்ற ஸ்நாக்ஸ். தாத்தா பாட்டிகளுக்கு இந்த கேக்கின் சுவை நிறையவே பிடிக்கும். டேஸ்ட் பார்க்க ஆர்வமாக இருக்கா? ஆன்லைனில் www.tredyfoods.com ஐ கிளிக் பண்ணுங்க உடனே ஆர்டர் பண்ணுங்க உங்கள் வீடு தேடி வரும்.

இன்னும் எத்தனையோ இருக்கு :
ஹோம் மேட்ஸ் பொருட்கள் மட்டும்தானா என்று நினைக்க வேண்டாம் ஊரின் பெருமை சொல்லும் சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு  குருக்கத்தி ராகி பக்கோடா, குருக்கத்தி கம்பு மாவு உருண்டை, குருக்கத்தி ராகி முருக்கு,   திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள், பேரிச்சம் பழங்கள்,  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகாரங்கள், காபி பவுடர், இரும்பு, பித்தளை, சோப் ஸ்டோன் பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் Tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது.  
இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா  மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம்.  
ஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை Tredyfoods.com மில்  ஆர்டர் செய்து  சுவைத்துப் பாருங்க... அப்புறம் அதன் ருசியையும், பொருட்களின் தரத்தைப் பற்றியும் நீங்களே அனைவருக்கும் எடுத்துக் கூறுவீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்