SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வரத்து அதிகரிப்பால் உளுந்து மூட்டைக்கு ரூ.700 குறைவு

2018-07-22@ 00:45:08

விருதுநகர்: வரத்து அதிகரிப்பால் விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.700 விலை குறைந்துள்ளது. பர்மா மற்றும் வடமாநிலங்களிலிருந்து விருதுநகர் மார்க்கெட்டிற்கு உளுந்தம்பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மூட்டைக்கு ரூ.700 வரை விலை குறைந்துள்ளது. புதிதாக வரும் பாசிப்பயறு சேதமடைந்திருப்பதால், பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ.600 விலை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், பாமாயில் டின்னுக்கு ரூ.30 விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.4,700க்கு விற்ற பர்மா பொடி உளுந்து (100 கிலோ), இந்த வாரம் ரூ.4,000க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.5,200க்கு விற்ற பருவட்டு உளுந்து ரூ.4,600க்கும், ரூ.7,200க்கு விற்ற பர்மா உளுந்தம்பருப்பு ரூ.6,500க்கும், ரூ.7,600க்கு விற்ற லைன் உளுந்தம்பருப்பு ரூ.7,000க்கும், ரூ.6,700க்கு விற்ற தொளி உளுந்தம்பருப்பு ரூ.6,000க்கும் விற்பனையானது.

ரூ.5,600க்கு விற்ற லைன் பாசிப்பயறு இந்த வாரம் ரூ.6,000க்கும், ரூ.6,800க்கு விற்ற அவியல் பாசிப்பயறு ரூ.7,400க்கும், ரூ.6,900க்கு விற்ற லைன் சுமார் பாசிப்பருப்பு ரூ.7,500க்கும், ரூ.8,000க்கு விற்ற லைன் நயம் பாசிப்பருப்பு ரூ.8,500க்கும் விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1,150க்கு விற்ற பாமாயில் 15 கிலோ டின், இந்த வாரம் ரூ.1,120க்கு விற்பனையானது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்