SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்கின் அசல் ஆவணத்தை கேட்டு எஸ்.ஐ தாக்கியதில் மாணவனுக்கு கை உடைந்தது

2018-07-21@ 02:57:26

சென்னை: வாகன சோதனையின் போது பைக்கில் வந்த மாணவனிடம் அசல் ஆவணங்களை கேட்டு உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியால் அடித்து கையை உடைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் (18). கல்லூரி மாணவன். இவர், நேற்றிரவு தனது நண்பருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் அருகே வந்தபோது, போலீசார் ஹாரூன் வந்த பைக்கை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளனர். உடனே ஹாரூன் பைக்கிற்கான நகல் ஆவணங்களை காட்டியுள்ளார். அதை வாங்கி பார்த்த சேத்துப்பட்டு உதவி ஆய்வாளர் இளையராஜா, ‘‘அசல் ஆவணங்களை காட்டுங்கள். இது சரியாக இல்லை’’ என்று கூறி உள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளருக்கும் பைக்கில் வந்த மாணவன் ஹாரூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் லத்தியை எடுத்து, என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கூறி சரமாரியாக அடித்து, இனி யாரிடமும் எதிர்த்து பேசக்கூடாது என்று கூறி அனுப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹாரூன் உடன் வந்த நண்பர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஹாரூனின் இடது கையை ஸ்கேன் எடுத்து பார்த்த போது கை எலும்பு உடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஹாரூன், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் இளையராஜா தன்னை லத்தியால் தாக்கியதில் இடது கை எலும்பு உடைந்துள்ளது எனவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்