SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழில் நீட் தேர்வு எழுதிய விவகாரம் சரியான மொழி பெயர்ப்பாளர்களை அனுப்பாதது தமிழக அரசின் தவறு : தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு

2018-07-21@ 01:52:38

சென்னை: மாணவர்கள் தமிழில் நீட் தேர்வு எழுதிய விவகாரத்தில், சரியான மொழி பெயர்ப்பாளர்களை அனுப்பி வைக்காதது தமிழக அரசின் தவறு என பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நீட் தேர்வு விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மிக தெளிவாக கூறியிருக்கிறார். நீட் தேர்வுக்கான தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள், தமிழகத்தில் இருந்துதான் வந்தனர். தமிழக அரசுதான் அவர்களை அனுப்பி வைத்தது. அவர்கள், மொழி பெயர்த்ததில்தான் தவறு நடந்துள்ளது. இதில் மத்திய அரசின் தவறு இல்லை என்று கூறியுள்ளார். எனவே, சரியான மொழி பெயர்ப்பாளர்களை அனுப்பி வைக்காதது தமிழக அரசின் தவறு. இவர்கள் செய்த தவறுக்கு மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது. அவர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது. இந்த சம்பவம் பற்றி மொழி பெயர்ப்பாளர்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முழுமையான அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்