SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு : அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல்

2018-07-19@ 15:48:50

டெல்லி: நாடு முழுவதும் மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பதிலில் இந்தியா முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டில் 36,735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34,651பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 38,947பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 3,29,000 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்