SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே காரணம்...!

2018-07-19@ 14:56:27

டெல்லி: நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். நீட் வினாத்தாளை மொழி பெயர்ப்பு செய்ய தமிழக அரசு நியமித்தவர்களை தான் பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். எனவே நீட் தேர்வு வினாத் தாள் மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல என்றார். மாநிலங்களவையில் அதிமுக எம்.பி-க்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார். மேலும் அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றார்.முன்னதாக தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவு தேர்வை 24,000 மாணவர்கள் எழுதினர். இதில் தமிழ் வினாத்தாளில் மொழி பெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49  கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை குறித்து  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில்,” நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு  தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா? எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49  கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேப்போல் அடுத்த 2  வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதில்,  நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்னை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆங்கிலத்தின் வினாக்கள் முறையே  இறுதியானது என்பதால் அதனை தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் மொழிமாற்றம்  தொடர்பாக எப்படி 196 கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும். மேலும் இதில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில்  தற்போது புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடும் பட்சத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பாதிப்படைவார்கள்  என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ தொடர்ந்துள்ள இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lebanonwar

  லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

 • chesspune

  ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

 • priyangaganthi

  உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்