SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளை: தொடங்கி வைத்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்

2018-07-17@ 19:24:52

சென்னை: ஜியோ நிறுவனத்தின் 25வது கிளையை நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்தியாவின் மின்சாதன நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் சென்னையில் மட்டும் 25 கிளைகளை நிறுவி வாடிக்கையாளா்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் 25வது கிளையை நடிகை ஸ்ருதி ஹாசன் தொடங்கி வைத்தார். சென்னை வி.ஆர்.மாலில் நிறுவனத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சலுகையாக வாடிக்கையாளா்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

உலகத்தரம் வாய்ந்த பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கேஷ் பேக் ஆபர்கள், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. சர்வதேச அளவிலான 200 பொருள்கள் உள்பட 4000 மின்னணு பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புதிய கிளையில், டி.வி., டிஜிட்டல் கேமரா, மின்னணு விளையாட்டு பொருள்கள், கம்ப்யூட்டர், செல்போன், ஏசி, பிரட்ஜ், வீட்டு உபயோக பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்