SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்சீமர் அபாயம்!

2018-07-17@ 09:51:50

நன்றி குங்குமம் முத்தாரம்

வீட்டைப்பூட்டிவிட்டு தெருவில் இறங்கியபின்பும் சரியாகப் பூட்டினோமா, கேஸ் ஸ்டவ்வை அடைத்தோமா என்ற தவிப்பு, முந்தையநாள் பார்ட்டி கொடுத்த நண்பரின் பெயரை தேடுவதில் மூளையில் கபடி தடுமாற்றங்கள் இருந்தால் நியூரோடாக்டரைப் பார்த்து விடுங்கள் என தகவல் கூறுகிறது அமெரிக்க நேஷனல் இன்ஸ்டிடியூட்.  

இந்தியாவிலுள்ள தற்போதைய அல்சீமர் (டிமென்ஷியா எனும் நினைவுத்திறன் குறைபாட்டில் ஒருவகை) நோயாளிகளின் எண்ணிக்கை 4 மில்லியன். 2030 ஆம் ஆண்டுக்குள் 7.3 மில்லியனாக உயரும் என்கிறது ஆய்வு முடிவுகள். வயதாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் அல்சீமரின் தாக்கமும் உக்கிரமாவது அபாய அறிகுறி என்பதில் சந்தேகமில்லை. குணப்படுத்த முடியாத மர்ம மறதிநோயான அல்சீமர், F-actin எனும் மூளையிலுள்ள புரதம் உடைவதால் ஏற்படுகிறது என நியூரோசயின்ஸ் இதழ் தகவல் கூறியுள்ளது.  

நிகழ்வு குறித்த தகவலை மூளை சேகரித்து வைத்து தேவைப்படும் போது தருவதைத்தான் நினைவுத் திறனாகக் கூறுகிறோம். இதனை engram என்று 1904 அன்றே பெயரிட்டு அழைத்தார் ஜெர்மனி உயிரியலாளரான ரிச்சர்ட் சீமோன். மூளையிலுள்ள நியூரான்கள்  தகவல்களைச் சேகரித்து பின் தேவைப்படும்போது திரும்பத்தருகின்றன. டெக்யுகத்தில் 30-45 வயதிலும் ஞாபகமறதி சிக்கல்கள் முளைத்துவருகின்றன். டெல்லியைச் சேர்ந்த ரோஹித் 30 வயதில் நிதிநிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

மனிதவளத்துறை இயக்குநராக இரவு பகல் என வேலை செய்ததில் சில நாட்கள் தொடர்ச்சி யாக தூக்கம் குறைய, முக்கியமான மீட்டிங், டீல்களை மறக்கத் தொடங்கியபோது தான் ரோஹித்துக்கு ஏற்பட்ட அபாயம் அவரின் குடும்பத்தினருக்கு புரிந்திருக்கிறது.‘‘குறைந்தபட்சம் 6-7 மணிநேரம் தூக்கம் குறைந்தால் நினைவு தொடர்பான பிரச்னைகள் எழுவது உறுதி” என்கிறார் மூளை மருத்துவரான அன்ஷூ ரோஹத்கி.

இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு நினைவுத்திறன் பிரச்னை உள்ளது. வயது, தலையில் அடிபடுவது, தூக்கக் குறைவு, குடிநோய் ஆகியவையும் காரணமாகிறது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டான் ஃபோர்டு இசைக்கலைஞரான எலினார் செல்ஃபிரிட்ஜுக்கு 101 வயது. இவருக்கு 70 வயதுக்கு முற்பட்ட நினைவுகள் மட்டுமே உள்ளன. தன் நினைவுகளிலுள்ள 400 பாடல்களை இன்றும் பியானோவில் வாசிக்கிறார் என்பது மருத்துவர்களையே திகைக்க வைக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்