SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு உறவினர்கள் போராட்டம்

2018-07-17@ 00:36:15

வண்ணாரப்பேட்டை: கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் தேவநாதன் (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா (38). அதே  பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கடந்த சனிக்கிழமை கல்பனாவுக்கு, வேலை செய்யும்போது காலில் காயம் ஏற்பட்டது.  இதில், அவரது கால் நரம்பு அறுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை  கல்பனாவுக்கு, அறுவை சிகிச்சை செய்ய அறைக்கு அழைத்து சென்றனர். மதியம் வரை அங்கு காத்திருக்க வைத்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை  செய்யாமல் கல்பனாவை அங்கிருந்து அனுப்பிவிட்டனர். இதையடுத்து அவரை மீண்டும் வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் வலி தாங்க  முடியாமல் தவித்தார்.

இதுபற்றி உறவினர்கள் கேட்டதற்கு, ‘‘ஒரே நாளில் அதிகமானோருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. கல்பனாவுக்கு ஓரிரண்டு நாட்களுக்குபின்  அறுவை சிகிச்சை செய்வோம்’’ என கூறியதாக தெரிகிறது. இதேபோல், மேலும் 3 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பியது  தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ் அலுவலகம் சென்று, முறையான சிகிச்சை  அளிக்கவில்லை என கூறி கோஷமிட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்