SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு சங்க தேர்தல் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

2018-07-17@ 00:31:04

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தல் விவரங்களை கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் உத்தரமேரூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இறந்த  உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை முறையாக பரிசீலிக்காமல்  நிராகரிக்கப்பட்டது.  

இந்த முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர் பட்டியல், உறுப்பினர்கள் விவரங்கள், நிராகரித்த வேட்பாளர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து  விபரங்களையும் இணையதளத்தில் பதிவிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா  பானர்ஜி, பி.டி ஆஷா ஆகியோர்  கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய இணையத்தில்  வெளியிடுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்